மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில்பெண் ஒருவரின் சடலம் மீட்பு
நேற்று (01) மாலை மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் மிதந்த நிலையில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மாலை 4.00 மணியளவில் நீர்த்தேக்கத்தில் சடலம் ஒன்று மிதப்பதை அவதானித்த பொதுமக்கள், அது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கினர்.
உயிரிழந்தவர் 86 வயதுடைய காட்டு மஸ்கெலியா தோட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் லெட்சுமி என அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.
ஹட்டன் நீதிமன்ற நீதிவானின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர், சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளங்கன் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

