மலையகத்தில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல்!

மலையகத்தில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல்!

இந்தியாவில் புதுச்சேரியில் இடம் பெறுகின்ற உலகளாவிய ரீதியிலான இந்திய வம்சாவளி அமைப்பான கோபியோ( GOBIO)அமைப்பு ஏற்பாடு செய்திருக்கின்ற சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் சிறப்பு விருது வழங்கும் விழா கடந்த 22 ஆம் திகதி முதல் 24-ம் திகதி வரை இடம்பெற்று வருகின்றது.

நேற்றைய தினம் (23.08.2025) ஏற்பாட்டுக் குழுவின் விசேட அழைப்பின் பேரில் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் கலந்து கொண்டிருந்ததோடு இவ் சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டிற்கு உலகளாவிய ரீதியில் இருந்து பல நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இதன் போது பிரதி அமைச்சர் பிரதீப் அவர்கள் மற்றும் புதுச்சேரி மாநில சட்டசபை உறுப்பினரும் பொதுப்பணி ,சுற்றுலா மற்றும் உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சருமான K.லக்ஷ்மி நாராயணன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இடம் பெற்றிருந்தது.

இச்சந்திப்பில் பிரதி அமைச்சர் அவர்கள் இலங்கையின் சுற்றுலா துறையை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடியதோடு, விசேடமாக மலையகத்தில் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பான காத்திரமான கலந்துரையாடல் மிக நீண்ட நேரமாக இடம்பெற்று இருந்தது.

இதன்போது அமைச்சர் லக்ஷ்மி நாராயணன் அவர்கள் இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்வதாக உறுதியளித்திருந்தார்.

manel