மர்மம் நிறைந்த இணையத்தொடர்
அஸ்வின் குமார் நாயகனாக நடித்துள்ள இணையத் தொடர் ‘தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்’. இது ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
இதை ஜெஸ்வினி எழுதி, இயக்கியுள்ளார். குரு லட்சுமணன், பாடினி குமார், ஸ்ரீத்து கிருஷ்ணன், பிரீத்தி ஷர்மா, சவுந்தர்யா, ஷியமந்தா கிரண், ரவிவர்மா, பிர்லா போஸ், விஸ்வாமித்ரன், சுரேந்தர் விஜே, ரஞ்சனா என பலர் நடித்துள்ளனர்.
“தூள் பேட்டை பகுதியில் துணை ஆணையராகப் பொறுப்பேற்கும் அஷ்வின் குமார், அங்கு நடக்கும் 3 கொலைகள் பற்றிய விசாரணையைத் தொடங்குகிறார். முதல் இரு பகுதிகளில் மர்மத்தை அள்ளித் தெளித்து ஏராளமான கேள்விகளை எழுப்பும் திரைக்கதை, ரசிகர்களுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்தும்,” என்கிறார் இயக்குநர்.

