ஹபாரதுவை, கினிகல பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புற முற்றத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஆசிரியைகள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 82 மற்றும் 87 வயதுடைய திருமணமாகாத இரு பெண்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களது மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.