மயிலம்பாவெளியில் இலவச மருத்துவ முகாம்: பொதுமக்கள் திரளாகப் பங்கேற்பு

மயிலம்பாவெளியில் இலவச மருத்துவ முகாம்: பொதுமக்கள் திரளாகப் பங்கேற்புமயிலம்பாவெளிபொதுமக்களின் ஆரோக்கிய மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு, மயிலம்பாவெளியில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் ஒன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
MST Health Care நிறுவனத்தினர் இந்த முகாமினை ஏற்பாடு செய்து நடத்தியிருந்தனர்.இம்முகாம் கடந்த 2026 ஜூன் 27 அன்று, மயிலம்பாவெளி, அண்ணாமலை வீதியில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெற்றதுவழங்கப்பட்ட இலவச சேவைகள்இம்முகாமில் கலந்துகொண்ட பொதுமக்களுக்குப் பின்வரும் மருத்துவச் சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டன
பொது மருத்துவ ஆலோசனை இரத்த அழுத்தப் பரிசோதனை (BP Test) இரத்தச் சர்க்கரைப் பரிசோதனை (Blood Sugar Test) பார்வைப் பரிசோதனை (Eye Check-up) கேட்டல் (செவித்திறன்) பரிசோதனை (Hearing Test)முதியவர்களுக்கான சிறப்பு ஆலோசனைஇம்முகாமின் முக்கிய அம்சமாக, முதியவர்களின் வீட்டுப் பராமரிப்பு (Elderly Home Care) தொடர்பான சிறப்பு ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் மருத்துவர்களால் வழங்கப்பட்டன.
முகாமிற்கு வருகை தந்த பொதுமக்கள் தங்களுடைய அடையாள அட்டை மற்றும் முந்தைய மருத்துவப் பதிவேடுகள் / சிகிச்சை அட்டைகளைக் (Clinic Records) கொண்டு வந்து, தங்களுக்கான ஆலோசனைகளையும் தகுந்த வழிகாட்டல்களையும் பெற்றுச் சென்றனர் ஆரோக்கியமான வாழ்வை நோக்கி முன்னேறுவோம் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இம்முகாமில் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

