மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு
மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சங்கத்தின் ஏற்பாட்டில் 2026 ஆகஸ்ட் மாதம் நாவலப்பிட்டி ஜயதிலக உள்ளக விளையாட்டரங்கில் மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் பாஸ்மின் ஷெரீப் அவர்கள், கௌரவ அதிதியாக கம்பளை சாஹிரா கல்லூரி அதிபர் அஷ்-ஷெய்க் M.A.M. மஸாஹிர் (SLEAS I) அவர்கள், மற்றும் பிரதம அதிதியாக Western PVC Pvt Ltd நிறுவனத்தின் தலைவர் அல்ஹாஜ் ஸாஹிர் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
அத்துடன், கம்பளை சாஹிரா கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களான R.J.M. ரபி, M. முப்தி, M. தாரிக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும், இலங்கை பிரெஞ்ச் சவாட் கிக் பாக்ஸிங் தேசிய சம்மேளனத்தின் தலைவர் மாஸ்டர் கௌரவ பாரிஸ் மௌலானா, செயலாளர் மாஸ்டர் லஷிக மதுஷான், பொருளாளர் மாஸ்டர் சுமித் துடல்லகே, மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சங்கத்தின் தலைவர் மாஸ்டர் D.M. நவ்ஷாத், உபத் தலைவர் கௌரவ கலாநிதி, தேசமான்ய நேட்டிவ் வைத்தியர் S.M. மின்ஹாஜ் (JP Whole Island), மற்றும் கம்பளை சாஹிரா கல்லூரி பிரதியதிபரும் மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சங்கத்தின் செயலாளருமான T.M.F. மூவி ஆகியோரும், பல முக்கிய பிரமுகர்களும் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இப்போட்டியில் கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய 145 ஆண் போட்டியாளர்களும், 30 பெண் போட்டியாளர்களும் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
கடுமையான போட்டி நிலவிய இச்சாம்பியன்ஷிப்பில் கண்டி மாவட்டம் சாம்பியன் பட்டத்தை வென்றதுடன், மாத்தளை மாவட்டம் இரண்டாம் இடத்தையும், நுவரெலியா மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.
இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு பெருந்தாராளமாக ஆதரவு வழங்கிய வைர அனுசரணையாளரான அல்ஹாஜ் ஸாஹிர் (Chairman, Western PVC Pvt Ltd) மற்றும் தங்க அனுசரணையாளரான அல்ஹாஜ் நஸார் உதயார் (Mahajana Group of Companies) ஆகியோருக்கு மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சங்கம் தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் வெள்ளி அனுசரணையாளர்களாக
- அல்ஹாஜ் M.Z.M. சைன் (Chairman, Fashion City)
- அல்ஹாஜ் M. பைரூஸ் (Chairman, Rahil Construction Company Pvt Ltd)
- அல்ஹாஜ் M. அஷ்பாக் (Chairman, Lakmuthu Super Market)
- அல்ஹாஜ் M. ஸம்ரின் (Chairman, Auto Advance Pvt Ltd)
- அல்ஹாஜ் M. அன்ஃபஸ் (Chairman, A & A Carz)
ஆகியோர் வழங்கிய ஆதரவும் குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பிற அனுசரணையாளர்களாக
- அல்ஹாஜ் M. கஸ்ஸாலி (Chairman, Nippon Car Sale)
- அல்ஹாஜ் M. ஆசாத் (Chairman, Rider Car Sale)
ஆகியோரும் இந்நிகழ்வின் வெற்றிக்காக தாராள பங்களிப்பை வழங்கினர்.
குறிப்பாக, மேற்கண்ட அனுசரணையாளர்களில் பலர் முதல் தடவையாக மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கு ஆதரவு வழங்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்கதும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுமாகும்.
இந்தப் போட்டியின் வெற்றிக்கு கம்பளை சாஹிரா கல்லூரி அதிபர் அஷ்-ஷெய்க் M.A.M. மஸாஹிர் (SLEAS I) அவர்களும், கம்பளை சாஹிரா கல்லூரி பிரதியதிபரும் மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சங்கத்தின் செயலாளருமான T.M.F. மூவி அவர்களும் வழங்கிய உறுதியான ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் அளப்பரிய பங்களிப்பாக அமைந்தது. அவர்களின் தொடர்ச்சியான ஊக்குவிப்பும் அர்ப்பணிப்பும் இந்நிகழ்வின் வெற்றிக்கு வலுவான ஆதாரமாக இருந்தது.
மேலும், அண்மையில் ஏற்பட்ட கடுமையான சூறாவளி காரணமாக பல்வேறு பாதிப்புகளும் பின்னடைவுகளும் ஏற்பட்ட நிலையில், போட்டியை திட்டமிட்டபடி நடத்துவது பெரும் சவாலாக இருந்தது. எனினும், அனைத்து தடைகளையும் தாண்டி உறுதியுடனும் ஒற்றுமையுடனும் செயல்பட்ட அனைவரின் அர்ப்பணிப்பு காரணமாக இச்சாம்பியன்ஷிப் மிகுந்த வெற்றியுடன் நிறைவு பெற்றது.
இந்நிகழ்வின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்த அனைத்து அதிகாரிகள், நடுவர்கள், பயிற்றுவிப்பாளர்கள், போட்டியாளர்கள், பெற்றோர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சங்கம் தனது மனமார்ந்த நன்றியையும் உயர்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

