மட்டக்களப்பில் யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

மட்டக்களப்பில் யானை தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏரளக்குளம் பகுதியில், வயலில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

ஏரளக்குளம், கருங்கன்மடு பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய வைரமுத்து நல்லரத்தினம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவதினமான நேற்று (14) பிற்பகல் வயலில் இருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, இவரை யானை தாக்கியதில் படுகாயமடைந்தார்.

உடனடியாக சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வழியில் உயிரிழந்தார்.

எஸ். ரஜீவன்