மகாவலி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

மகாவலி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை

மகாவலி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்றிரவு(17) முதல் பெய்து வரும் மழை காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் மகாவலி ஆற்றின் ஓரத்தில் உள்ள பல தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத்திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

கிண்ணியா, மூதூர், கந்தளாய், சேருவில, வெலிக்கந்த, லங்காபுர, தமன்கடுவ மற்றும் திம்புலாகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள அபாயம் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மட்டக்களப்பு-பொலன்னறுவை வீதியின்  கல்லெல்ல பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுவதோடு  சோமாவதி ரஜ மகா விகாரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான வீதியும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கையாக, சோமாவதி  ரஜ மகா விகாரைக்குச் செல்லத் திட்டமிடும் பக்தர்கள் அடுத்த சில நாட்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை அந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மகாவலி ஆற்றுக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கவும், வெள்ளத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எஸ். ரஜீவன்