போதைப்பொருள் வைத்திருந்த கணக்கப்பிள்ளை கைது
புப்புரஸ்ஸ லெவலன் தோட்டத்தில் ஜஸ் போதை பொருள் வைத்திருந்த கணக்கப்பிள்ளை (கள உத்தியோகத்தர்) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (22) இடம்பெற்றுள்ளது.
ஜனவசம லெவலன் தேயிலை தோட்டத்தை பராமரிக்கும் கணக்கப்பிள்ளை நேற்று மதியம் லெவலன் தோட்டத்தில் உள்ள விடுதியில் இருக்கும் சந்தரப்பத்தில் புப்புரஸ்ஸ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய உடனடியாக குறித்த விடுதியை சுற்றிவளைத்து சோதனை செய்த போது நபரிடம் இருந்து ஜஸ் போதை பொருள் மீட்க்கப்பட்டுள்ளது.

