போதைப்பொருளும் ஆயுதங்களும் வைத்திருந்த 9 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை வைத்திருந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தீடீர் சோதனை நடவடிக்கைகளின்போது இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 2 பேரும் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 7 பேரும் என 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

