பொலிஸ் மா அதிபரை தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று!
நாட்டின் 37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று பி.ப 1.30 இற்கு பாராளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது.
பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேஷபந்து தென்னகோனை நீக்குவதற்காக, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாகச் சபாநாயகர் அனுப்பியுள்ள கடிதத்திற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
அதன்படி, புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கான பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியலமைப்பு பேரவைக்குப் பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

