“புயல் கடந்த பூமி, புதுப் பயிர் காணும்!” பிரதி அமைச்சரின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

“புயல் கடந்த பூமி, புதுப் பயிர் காணும்!” பிரதி அமைச்சரின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

“உயிர் காக்கும் இயற்கைக்கும், உணவளிக்கும் உழவுக்கும், வாழவைக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்”

உலகுக்கு உணவளிக்கும் உழவர் பெருமக்களையும், இயற்கையையும் போற்றும் இத்திருநாளிலே, இலங்கை வாழ் அனைவருக்கும், உறவுகளுக்கு எனது இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இம்முறை தைப்பொங்கல் பண்டிகையை நாம் சவாலான ஒரு சூழலுக்கு மத்தியிலேயே கொண்டாடுகிறோம். அண்மையில் வீசிய ‘தித்வா’ (Ditwa) புயல் எமது மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஆனாலும், சோதனைகளை கண்டு துவண்டு விடாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கான துரித நிவாரணப் பணிகளை முன்னெடுத்து, அவர்களை மீட்டெடுப்பதில் நாம் முழு மூச்சுடன் செயல்பட்டுள்ளோம்.

“புயல் கடந்த பூமி, புதுப் பயிர் காணும்!” என்ற சொல்லின் படி எமது மக்களின் அசைக்க முடியாத தன்னம்பிக்கையே இந்தப் பாதிப்புகளிலிருந்து நாம் விரைவாக மீண்டு வர உதவியது.பிறக்கின்ற இத்தைத்திருநாள், எமது மக்களின் வாழ்வில் ஒரு ‘மறுமலர்ச்சி யுகத்தின்’ ஆரம்பமாக அமைய வேண்டும்.

பழைய துயரங்களையும், கசப்பான நினைவுகளையும் கடந்து, “புதிய ஆண்டு – புதிய முயற்சி” என்ற உறுதியோடு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.மக்களின் உரிமைகளை வென்றெடுத்து, பாதுக்ப்பை உறுதி செய்து பொருளாதார மற்றும் சமூக ரீதியில் ஒரு பலமான சமூகமாக எம்மை மாற்றியமைக்க இத்திருநாளில் நாம் உறுதியேற்போம்.

நம் அனைவருக்கும் மகிழ்ச்சியும், சுபீட்சமும், நிம்மதியும் பொங்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து ,அனைவரது வாழ்விலும்வளமும், நலமும் செழுமையாய் பொங்கி வளமான நாட்டில் அழகான வாழ்க்கைக்கு வழி பிறக்க தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

பிரிதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு

manel