புதிய பொருளாதார நிவாரணத் தொகுப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம்
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய பொருளாதார நிவாரணத் தொகுப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, குறித்த நிவாரணத் தொகுப்பை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (07) நண்பகல் பாராளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

