பிரதி அமைச்சர் பிரதீப் மும்பையில் சுற்றுலா அமைப்புகளுடன் சந்திப்பு

பிரதி அமைச்சர் பிரதீப் மும்பையில் சுற்றுலா அமைப்புகளுடன் சந்திப்பு

இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவினை வலுப்படுத்வும். அதனை மேலும் உறுதி செய்து கொள்ளும் முகமாகவும் தமிழ் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற் கொண்டிருக்கின்ற பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இலங்கையில் ஏற்பட்ட டித்வா புயல் பேரிடால் மலையகத்தில் பாரியளவு பாதிக்கப்பட்டுள்ள ற்றுலாத் துறையினை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பாக நேற்றைய தினம் (19/12) மும்பையில் அமைந்துள்ள சுற்றுலா துறைசார்ந்த அமைப்பான TRAVEL AGENTS ASSOCIATION OF INDIA குழுவினருடன் சென்னையில் விசேட கலந்துரையாடல் ஒன்றினை மேற் கொண்டிருந்தார்.

இதன் போது குறித்த அமைப்பானது மலையக மக்களுக்கான மனிதபிமான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாகவும் பேரிடரால் வீழ்ச்சியடைந்த மலையக சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கும் இலங்கையில் இத்துறைச்சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்கும் முன்வந்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்திருந்தார்

இவ் கலந்துரையாடலினை சென்னையில் உள்ள இலங்கைக்கான உதவி உயர்ஸ்தானிகர் வைத்தியர். கணேசநாதன் கேதீஸ்வரன் அவர்களால் ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எஸ். ரஜீவன்