பாராளுமன்ற அமர்வு ஒக்டோபர் 7முதல் 10வரை
பாராளுமன்ற அமர்வு ஒக்டோபர் 7முதல் 10வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் (26) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

