‘பாரம்பரியத்திற்கு உயிர்’ எனும்தொனிப்பொருளின் கீழ் 1000 தொல்பொருள்இடங்களைப் பாதுகாக்கும் திட்டம்
“பாரம்பரியத்திற்கு உயிர்” எனும் தொனிப்பொருளின் கீழ் 1000 தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டத்தை யதார்த்தமாக்கும் நடவடிக்கை அண்மையில் அம்பாறை பிரதேசத்தில் ஆரம்பமானது.
அன்றைய திகாமடுல்ல மன்னர் காலத்தில் வரலாற்றுப் புகழ்பெற்ற புனிதத் தலங்களுக்கிடையில் பக்தர்களின் கவனத்தை ஈர்த்த புனிதத் தலமாக தீகவாபி விளங்கியது.
தீகவாபி புனித பூமியிலிருந்து அம்பாறை – மஹியங்கனை பிரதான வீதியில் அம்பாறையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள உஹண பிரதேசத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ரஜலக புராதன அரியாகல விகாரையில் புதிய தொல்பொருள் அலுவலகமொன்றை ஆரம்பித்து, ‘பாரம்பரியத்திற்கு உயிர்’ (Urumayata Jeevayak) தேசிய வேலைத்திட்டத்தை அதன் ஸ்தாபகரான புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தலைமையில் அடையாளப்படுத்தினார்.

