பாடசாலை மாணவர்களை பாதுகாப்பின்றி பேருந்தின் மிதி பலகையில் ஏற்றி செல்லும் பேருந்து

பாடசாலை மாணவர்களை பாதுகாப்பின்றி பேருந்தின் மிதி பலகையில் ஏற்றி செல்லும் பேருந்து

ஹட்டனில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றில் காலை வேளையில் பாடசாலை மாணவர்களை அளவிற்கு மீறி ஏற்றி செல்லும் சம்பவம் ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் பொகவந்தலாவ பகுதியில் 30.07.2026.காலை வேளையில் யில் இடம்பெற்றது.

ஹட்டனில் இருந்து புறப்படும் இந்த பேருந்து அதிகமான பாடசாலை மாணவர்களை ஏற்றிவருவதோடு மாணவர்களை பாதுகாப்பின்றி பயணிக்க கூடியதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பாடசாலை நாட்களில் விசேடமாக பாடசாலை மாணவர்களுக்கான சேவைக்கான அரச பேருந்து ஒன்றி காலை வேலையில் போக்குவரத்திற்கு ஈடுபடுத்தப்படும் பட்சத்தில் மாணவர்களின் போக்குவரத்தை இலகுவான முறையில் முன்னெடுக்க முடியுமென மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவிக்கின்றனர்.

இது போன்ற பேருந்துகளில் மாணவர்கள் இவ்வாறான ஒரு நிலையில் பயணிக்கும் சந்தர்ப்பத்தில் இந்த மாணவர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது யார்?

manel