பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 69பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 69பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 69பேர் உயிரிழந்து மேலும் 150பேர் காயமடைந்துள்ளதாகப் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்திய பிலிப்பைன்ஸில் நேற்று (30) 6.9 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 26 பேர் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போது உயிரிழப்பு 69ஆக அதிகரித்துள்ளது.

செபு நபர கடற்கரைக்கு அருகில் இந் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந் நிலநடுக்கத்தில் மேலும் 147 பேர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. 

இந் நிலநடுக்கத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கட்டிடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் சேதமடைந்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருகிறது.

இதன்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

எஸ். ரஜீவன்