பரீட்சைக் காலத்தில் அனர்த்தங்களைத் தவிர்க்க விசேட வேலைத்திட்டம்

பரீட்சைக் காலத்தில் அனர்த்தங்களைத் தவிர்க்க விசேட வேலைத்திட்டம்

உயர்தரப் பரீட்சைக் காலப்பகுதியில் அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதற்காக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவை இணைந்து விசேட கூட்டு வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளன. 

இந்த முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு எதிர்பாராத காலநிலையால் அனர்த்தங்களால் ஏற்படக்கூடிய தடைகளைத் தவிர்ப்பதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, பரீட்சை காலப்பகுதியில் அனர்த்த அபாயமற்ற சூழலை உருவாக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டி ஆவணம் ஒன்றையும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ளது. 

ஏதேனும் அனர்த்த நிலைமை காரணமாக பரீட்சைக்குத் தோற்றுவதில் பாதிப்பு ஏற்படும் மாணவர்கள் 117 என்ற இலக்கத்திற்கோ அல்லது பரீட்சைத் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்திற்கோ தகவல் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

எஸ். ரஜீவன்