நுவரெலியா – ஹட்டன் வீதியில் கொடூர விபத்து: இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் இன்று (19) காலை இடம்பெற்ற கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
லிந்துலை, தங்கக்கலை கேம்பிரி தோட்டத்தைச் சேர்ந்த திவ்யா உமா சந்திரன் என்பவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவராவார்.
தங்கக்கலை தோட்டப் பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், எதிர்த்திசையில் இருந்து வந்த வேன் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்த அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

