நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றின் தீர்மானம்
நீதித்துறை திருத்தச் சட்டமூலத்தின் ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்லவென உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் இன்று (22) பாராளுமன்றுக்கு அறிவித்தார்.
பாராளுமன்ற அமர்வின் ஆரம்பித்தின் போது அவர், உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை அறிவிக்கையில் இதனை குறிப்பிட்டார்.
இதன்காரணமாக அதனைப் பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையினால் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

