நீச்சல் பயிற்சியின்போது 5 வயது பிள்ளை உயிரிழப்பு
நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியில் உள்ள உணவகமொன்றின் நீச்சல் தடாகத்தில் மூழ்கி, ஐந்து வயது ஆண் பிள்ளை ஒன்று உயிரிழந்துள்ளது.
நேற்று (08) மாலை இந்த விபத்து நடந்ததாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.
நுகேகொடை, தலபத்பிட்டிய பகுதியைச் சேர்ந்த ஐந்து வயது பிள்ளையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இந்தப் பிள்ளை ஆரம்ப பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குழுவுடன் நீச்சல் பயிற்யாளரின் உதவியுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, நீரில் மூழ்கியுள்ளது.
பிள்ளை உடனடியாக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மிரிஹான பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

