நிலாவெளி கடற்கரையில் வெளிமாவட்டத்தினர் ஊடுருவல்:

நிலாவெளி கடற்கரையில் வெளிமாவட்டத்தினர் ஊடுருவல்: உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கோரி குச்சவெளி தவிசாளரிடம் படகுச் சங்கத்தினர் அவசரக் கோரிக்கை
குச்சவெளிநிலாவெளி பொதுக் கடற்கரைப் பகுதியில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் சட்டவிரோத ஊடுருவலால் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்து,
புறா தீவு படகுச் சங்க (Pigeon Island Boat Association) உறுப்பினர்கள் இன்று (01-07-2026) குச்சவெளி பிரதேச சபை தவிசாளரை நேரில் சந்தித்து அவசரக் கோரிக்கை விடுத்தனர்.
வெளிமாவட்ட நபர்களின் அத்துமீறிய தலையீடுகளால் தங்களின் பாரம்பரிய படகுச் சேவை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகப் படகுச் சங்கத்தினர் தவிசாளரிடம் சுட்டிக்காட்டினர்.
இக்கோரிக்கையைக் கனிவுடன் செவிமடுத்த தவிசாளர், இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண்பதாக உறுதியளித்தார்நாம் அனைவரும் ஒற்றுமையாகவும் கட்டுக்கோப்பாகவும் செயல்படுவதன் மூலமே பிரதேச பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வுகளைக் காண முடியும்.
எனது பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை” என தவிசாளர் இதன்போது திட்டவட்டமாகத் தெரிவித்தார்.இதன் முதற்கட்ட நடவடிக்கையாக, பிரதேச சபையின் அனுமதியின்றி வெளிமாவட்ட நபர்களால் நிலாவெளி கடற்கரையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பலகைகளையும் (Signboards) உடனடியாக அகற்றுமாறு நிலாவெளி உப பிரதேச சபைக்குத் தவிசாளர் அவசரப் பரிந்துரை வழங்கியுள்ளார்.
உள்ளூர் மக்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தவிசாளரின் இந்த உடனடி அதிரடி உத்தரவு, நிலாவெளி பகுதி படகு ஓட்டுநர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.

