நாவலப்பிட்டியில் ரயிலில் மோதுண்டு இறந்தவர் அடையாளம் தெரியவில்லை
நாவலப்பிட்டியில் ரயிலில் மோதி அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயிலிலேயே அவர் மோதுண்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (25) காலை 9 மணியளவில் நாவலப்பிட்டி சென்பிரிட்ஜ் வீதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது
இதனையடுத்து சடலத்தை மீட்டு நாவலப்பிட்டி தொடருந்து நிலையத்தில் ஒப்படைத்து விட்டு தொடருந்து பதுளை நோக்கி பயணித்துள்ளது.
இறப்பு சம்பவம் விபத்தா அல்லது உயிர்மாய்ப்பா என்பது தொடர்பாக நாவலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


