தென் பகுதி கடலில் காணாமல் போன 4 மீனவர்களை தேடி விசேட நடவடிக்கை!

தென் பகுதி கடலில் காணாமல் போன 4 மீனவர்களை தேடி விசேட நடவடிக்கை!

மாத்தறை, குடாவெல்லப் பகுதியிலிருந்து 4 மீனவர்களுடன் கடலுக்குச் சென்ற மீன்பிடிப் படகு ஒன்று காணாமல் போயுள்ளது.

காணாமல் போயுள்ள மீனவர்களை மீட்கும் பணியில் இலங்கை கடற்படையும் விமானப்படையும் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.

காணாமல் போன படகையும் அதில் உள்ள 4 மீனவர்களையும் கண்டறிவதற்காகத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

manel