திருகோணமலையில் படகு கவிழ்ந்து இளம் மீனவர் மாயம்

திருகோணமலையில் படகு கவிழ்ந்து இளம் மீனவர் மாயம் உறவினர்கள் சந்தேகம்!

திருகோணமலை:திருகோணமலை, வீர நகர் பகுதியிலிருந்து நேற்று இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 25 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர், இன்று காலை கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக துறைமுக காவல்துறை தெரிவித்துள்ளது.

சைனா பே மீனவர் கிராமத்தைச் சேர்ந்த, ஒரு பிள்ளையின் தந்தையான உதித்த குமார என்பவரே இவ்வாறு காணாமல் போனவராவார்.காணாமல் போனவருடன் ஒரே படகில் சென்ற தந்தை மற்றும் மகன் ஆகிய இரு மீனவர்கள் இன்று காலை கரை திரும்பியுள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் தங்களது படகு கப்பல் ஒன்றுடன் மோதி கவிழ்ந்ததாகவும், அதன் போதே உதித்த குமார கடலில் மூழ்கி காணாமல் போனதாகவும் அவர்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இந்த மறைவில் தீவிர சந்தேகம் இருப்பதாக காணாமல் போன மீனவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தற்போதைய நிலையில் சக மீனவர்கள் பல படகுகளில் கடலுக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் அதேவேளை, திருகோணமலை துறைமுக காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

manel