தியாதீபம் திலீபனுக்குக் கொழும்பில் அஞ்சலி

தியாதீபம் திலீபனுக்குக் கொழும்பில் அஞ்சலி

பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தியாதீபம் திலீபனுக்குக் கொழும்பில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தியாகதீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் அஞ்சலி நிகழ்வுகள் தமிழர்தாயகப் பகுதிகளிலும், புலம்பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கொழும்பில் தியாகதீபம் திலீபனுக்கு இன்று (26) இறுதிநாள் அஞ்சலிகளைச் செலுத்தினார்.

குறிப்பாக தற்போது செப்டெம்பர் மாதத்திற்கான இரண்டாவது மாதாந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் இடம்பெற்று வருகின்றது. ஆகவே பாராளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ரவிகரன் எம்.பி. கொழும்பில் தங்கியுள்ளார்.

இந்நிலையிலேயே அவரால் கொழும்பில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் தியாகதீபம் திலீபனின் திருஉருவப் படத்திற்கு சுடரேற்றப்பட்டு, மலர் தூவப்பட்டு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

எஸ். ரஜீவன்