தனிமையில் வாழ்ந்த பெண் சடலமாக மீட்பு

தனிமையில் வாழ்ந்த பெண் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், சுன்னாகம் ஆறுமுகம் வீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் வசித்த வயோதிப பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த நடராஜா சந்திரா (வயது-70) என்பவராவார்.

சடலம் காணப்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய
நேற்று திங்கள் கிழமை (27) மாலை சம்பவ இடத்துக்கு சென்ற யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர்

எஸ். ரஜீவன்