தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வீழ்ச்சி!
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்களின் தாக்கத்தால், தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (08) வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,129.15 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேவேளை, ஒரு அவுண்ஸ் வெள்ளியின் விலை 60.67 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.
கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வந்த நிலையில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை வீழ்ச்சியின் தாக்கம் காரணமாக, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை குறையக்கூடும் என சந்தை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

