டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்வு!
நடப்பு ஆண்டில் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு வரையிலான கண்காணிப்புத் தரவுகளின்படி, நாட்டில் மொத்தம் 91,059 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதில் ஜூலை மாதத்தில் மாத்திரம் அதிகபட்சமாக 29,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியில் கம்பஹாவில் 19,406 நோயாளர்களும், கொழும்பில் 18,901 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
மாகாண ரீதியில் மேல் மாகாணத்திலேயே மிக அதிகமாக 48,244 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
தற்போது நாடு முழுவதும் 119 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் உயர் அபாயப் பகுதிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
தொழில்துறை மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் டெங்கு நுளம்புகள் பெருகுவதைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

