டிரம்ப் நிர்வாகத்தில் 80 ஆயிரம் விசாக்கள் இரத்து

டிரம்ப் நிர்வாகத்தில் 80 ஆயிரம்  விசாக்கள் இரத்து

அமெரிக்காவில் பெருந்தொகையான குடியேற்ற விசாக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பலர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கடுமையான குடியேற்றக் கொள்கை காரணமாக இந்த பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் இதுவரை சுமார் 80,000 குடியேற்றமற்ற விசாக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

செல்லுபடியாகும் விசாக்கள் வைத்திருந்தவர்கள் கூட முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாடுகடத்த வழிவகுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ். ரஜீவன்