டிரம்பின் முயற்சிக்குப் பிரதமர் மோடி பாராட்டு

டிரம்பின் முயற்சிக்குப் பிரதமர் மோடி பாராட்டு

காகாவில் அமைதியை ஏற்படுத்தும் அமெரிக்க அதிபர் டிரம்பின் முயற்சிக்குப் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பினருக்கு ட்ரம்ப் விதித்த காலக்கெடுவின்படி, அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க ஹமாஸ் முன்வந்துள்ள நிலையில், ட்ரம்பின் முயற்சியை இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.

நியாயமான அமைதிக்கு வித்திடக்கூடிய இந்த முயற்சிக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரையில் காசாவில் 65,000இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் ஏதேனும் ஒரு வழியில் அமைதி ஏற்பட வேண்டும்.

ஹமாஸ் வசம் உள்ள அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியிருந்தார்.

வொஷிங்டன் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்குள் அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் உடன்பட வேண்டும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதுவே ஹமாஸுக்கு இறுதி வாய்ப்பு என்றும் இதற்கு உடன்படவில்லை என்றால் அவர்களுக்கு எதிராக மிகவும் தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ட்ரம்ப் கூறியிருந்தார்.

ட்ரம்ப்பின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பு அனைத்து பணயக் கைதிகளையும் விடுவிக்க தயார் என்றும், உடனடியாக அமைதி பேச்சுவார்த்தையை மத்தியஸ்தர்கள் மூலம் முன்னெடுக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

எஸ். ரஜீவன்