ஜோன்ஸ்டன் பெனாண்டோ கைது!
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொல்கொல்ல பகுதியில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ அரங்கிற்கு கதிரைகளை கொள்வனவு செய்தபோது உரிய கொள்முதல் நடைமுறையை பின்பற்றாததன் மூலம் அரசாங்கத்திற்கு ரூ. 79 இலட்சத்துக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று முற்பகல் ஆணைக்குழுவில் வந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

