சம்பத் மனம்பேரி என் செயலாளர் அல்லர் – ஜொன்ஸ்டன்
சம்பத் மனம்பேரி என் செயலாளர் அல்லர் என்று முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
தமது செயலாளராகத் தமது மாவட்டத்தைச் சேர்ந்தவர்களையே நியமித்ததாகவும் சம்பத் மனம்பேரி என்றொரு செயலாளர் தமக்குக் கிடையாது என்றும் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று (5) குருணாகலில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் உரையாற்றும்போது ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு விளக்கம் அளித்தார்.

