சந்தையில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிப்பு!

சந்தையில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரிப்பு!

சந்தையில் மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மலையக மரக்கறிகளை விநியோகிக்கும் முக்கிய பொருளாதார மத்திய நிலையமான கெப்பெட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தில், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் மொத்த விலை 700 ரூபாயாக அதிகரித்துள்ளது.

அதேபோல், ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விலை 650 ரூபாயாகவும், கோவாவின் விலை 450 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையினால் மரக்கறிப் பயிர்ச்செய்கைகள் சேதமடைந்துள்ளமையே இந்த விலை அதிகரிப்புக்குக் காரணம் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

manel