செந்தில் தொண்டமானுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிய கௌரவம்
அண்மையில் நேபாள தலைநகர் காட்மாண்டு வில் இடம்பெற்ற உள்நாட்டு போராட்டங்களின் போது ஏற்பட்ட வன்முறை சம்பவங்களை அடுத்து பல்வேறுபட்ட பொதுமக்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர்.
இதேவேளை தொழிலாளர் தேசிய சமையலெனத்தின் கூட்டத்தொடர் ஒன்றில் பங்கேற்க நேபாள தலைநகர் காத்மண்டுவில் தங்கி இருந்த நிலையில் தங்கி இருந்த விடுதியில் போறார்கள் விடுதியை தாக்கியும் தீ வைக்கும் வன்முறையில் ஈடுபட்டிருந்த வேளை தன்னுயிரையும் பொருட்படுத்தாது அங்கு தங்கியிருந்த ஏனையவர்களை குறிப்பாக இந்தியர்களை காப்பாற்றியமைக்காக அவரை பாராட்டி தமிழ்நாடு முதலமைச்சர் பாராட்டு பத்திரம் ஒன்றை தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ முகமது அப்துல்லா அவர்களின் கரங்களில் கொடுத்து நேரடியாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் அவர்களுக்கு நேரடியாக வழங்குமாறு பணிப்புரை விடுத்திருந்தார்.







அதற்கு அமைய இன்றைய தினம் கொழும்பிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகமான சௌமிய பவனுக்கு நேரடி விஷயத்தை மேற்கொண்ட தமிழ்நாடு பாராளுமன்ற உறுப்பினர் முகமது அப்துல்லா அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பாராட்டு பத்திரத்தை முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகிய செந்தில் தொண்டமான் அவர்களின் கரங்களில் கொடுத்ததுடன் அப்பாராட்டு பத்திரத்தை குழுமியிருந்த இருந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்களின் முன்னிலையில் படித்துக் காட்டி தனது பாராட்டுதல்களையும் தெரிவித்தார்.

