கொத்மலை றம்பொட பிரதேசத்திற்கு பழனி திகாம்பரம் கள விஜயம்
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொத்மலை றம்பொட பிரதேசத்திற்கு முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் விஜயம் செய்து மக்கள் சந்திப்பு.நடத்தியுள்ளர்.
நுவரெலியா மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட பிரதேச செயலகம் கொத்மலையாகும். கொத்மலையில் றம்பொட பிரதேசத்திற்கு தரைவழி பாதை முற்றாக தடைப்பட்டிருந்தது.
இன்றைய தினம் பஹதுலுவ வரை சென்று பின் நடைவழியாகவும் லொரி வழியாகவும் சென்று மக்களை சந்தித்தார்.
கொத்மலை பிரதேசத்தில் 39 முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரணங்களை வழங்கியதுடன் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
இதனையடுத்து கொத்மலை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளரை சந்தித்து தற்போதுள்ள நிலைமையினை விசாரித்ததோடு, மக்களை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அதற்கான உதவிகளை செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு பிரதானமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவி வேண்டும். அவர்களின் அறிக்கைப்படியே நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
எனவே அதனை விரைவாக செய்வதற்கு உதவுமாறு பிரதேச செயலாளர் கேட்டுக்கொண்டார்.
றம்பொடை தரைவழி பாதை சீராகியதும் றம்பொடை பிரதேசத்திற்கு தேவையான அத்தியவசிய பொருட்களை அனுப்புவதாகும் தெரிவித்தார்
கமலதாஷன்


