குஜராத்தை வீழ்த்தி மும்பை அபார வெற்றி!

குஜராத்தை வீழ்த்தி மும்பை அபார வெற்றி!

ஐ.பி.எல். 2026 டி20 கிரிக்கெட் தொடரின் 30 ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று (20) மோதின. 

அகமதாபாத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 199 ஓட்டங்களை பெற்றது. 

துடுப்பாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக திலக் வர்மா 101 ஓட்டங்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 

பந்து வீச்சில் குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக ககிசோ ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 15.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 100 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 

துடுப்பாட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 26 ஓட்டங்களை பெற்றார். 

பந்து வீச்சில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அஷ்வினி குமார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

manel