கிளிநொச்சி வெடிப்புச் சம்பவத்தில் இருவர் காயம்
கிளிநொச்சி வெடிப்புச் சம்பவத்தில் இருவர் காயம் அடைந்துள்ளனர்.
கிளிநொச்சி – தட்டுவான்கொட்டியில் இன்று முற்பகல்11:30 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
பாழடைந்த வீடொன்றில் அகழ்வு பணிக்காக சென்ற இருவர் தமது பணியினை தொடர்ந்த போது நிலத்திற்கு கீழ் இருந்த குண்டு வெடித்துள்ளது.
இதன்போது பலத்த காயமடைந்த இருவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

