கால்பந்து செம்;பியன்ஷிப் வெற்றியாளர்களுக்கு அமெரிக்க மோதிரங்கள்
அர்ஜென்டினா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதும் கால்பந்து செம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கண்டுகளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஞாயிற்றுக்கிழமை இந்த இறுதிப்போட்டி, நியூயோர்க்கில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் நடைபெறுகிறது.
கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் நியூயோர்க்கில் காற்றின் தரம் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும், போட்டியின் அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விளையாட்டுகளில் வழக்கமாக வழங்கப்படும் ‘செம்பியன்ஷிப் மோதிரங்கள்’ (Championship rings) முறை, இந்த முறை கால்பந்து செம்பியன்ஷிப்பிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
கிண்ணத்தை வெல்லும் அணியினருக்கு 30 மோதிரங்களும், ரசிகர்களின் விற்பனைக்காக 1,996 மோதிரங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மோதிரத்திலும் கால்பந்து செம்பியன்ஷிப்பின்; சிறிய வடிவம் மற்றும் சிறப்பான பொறிப்புகள் இடம்பெறுகின்றன.
ஜனாதிபதி ட்ரம்ப் இந்தப் போட்டியில் கலந்துகொள்வதை வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, போட்டி ஒன்றின்போது அமெரிக்க வீரர் போலரின் பலோகுனுக்கு வழங்கப்பட்ட சிவப்பு அட்டையை மறுபரிசீலனை செய்ய ட்ரம்ப் கால்பந்து சம்மேளனத் தலைவரிடம் கோரியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

