களுத்துறை கடலில் கரையொதுங்கிய 12கிலோ போதைப்பொருள்
களுத்துறை, கட்டுக்குறுந்த கடற்கரையில் இன்று (05) காலை பொதியொன்று மீட்கப்பட்ட நிலையில், அதில் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பொதியில் சுமார் 12 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் இருந்துள்ளதுடன் அதன் பெறுமதி 3 கோடி ரூபாவுக்கும் அதிகம் எனக் கூறப்படுகிறது.
கடற்கரையில் கரையொதுங்கிய இந்தப் பொதியை அருகிலுள்ள சுற்றுலா விடுதி ஊழியர்கள் கண்டதுடன் இதுதொடர்பில் பாதுகாப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பின் குறித்த பொதியை மேலதிக விசாரணைகளுக்காக எடுத்துச்சென்ற நிலையிலேயே போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

