கலை இலக்கிய மன்றம் நடாத்திய பரிசளிப்பு விழா 2026

கலை இலக்கிய மன்றம் நடாத்திய பரிசளிப்பு விழாபரிசளிப்பு விழா 2026
அபு அலா
அன்பின் பாதை எண்ணம் போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றம் நடாத்தும் பரிசளிப்பு விழாதிருகோணமலை மெதடிஸ்த மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் (26) இடம்பெற்றது.திருகோணமலை அன்பின் பாதை எண்ணம்போல் வாழ்க்கை கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் கனக தீபகாந்தன் தலைமை இடம்பெற்ற இவ்விழாவுக்கு களுத்துறை போதனா வைத்தியசாலையின் சிறுநீரக சத்திர சிகிச்சை நிபுணர்வைத்தியர் தேவராஜா அரவிந்தன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும், கௌரவ விருந்தினர்களாக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு உதவிச் செயலாளர் மோ.சார்ள்ஸ் அல்வின் மற்றும் மெதடிஸ்த மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி சுபத்ரா ஜோன் தேவதாஸ், கிழக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் தண்டாயுதபானி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பல வருடங்களாக கலை இலக்கியத்தில் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டு வருகின்றவர்களுக்கும், பாடசாலை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் அதிக அக்கறை கொண்டு ஈடுப்பட்டு வருகின்ற மற்றும் பல போட்டி நிகழ்வுகளில் கலந்துகொண்டு வெற்றிவெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னம், சான்றிதழ், பதக்கம் மற்றும் பரிசுப் பொருட்களும் இதன்போது அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.

