கேபிள் கார் விபத்தில் மற்றொரு பிக்கு உயிரிழப்பு

கேபிள் கார் விபத்தில் மற்றொரு பிக்கு உயிரிழப்பு

குருநாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் இன்று (28) உயிரிழந்தார். 

இதன்படி குறித்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. 

நா உயன ஆரண்ய சேனாசனத்தின் மடங்களுக்கு இடையே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்ட கேபிள் கார் உடைந்து வீழ்ந்த விபத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏழு பிக்குகள் முன்னதாக உயிரிழந்தனர். 

மேலும், 5 பிக்குகள் காயங்களுடன் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

எஸ். ரஜீவன்