கன்னத்தில் அறைந்த ஆசிரியை: வகுப்பறையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த மாணவன்!

கன்னத்தில் அறைந்த ஆசிரியை: வகுப்பறையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த மாணவன்!

இந்தியாவில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் கதரொட் பகுதியில் தனியார் பாடசாலை ஒன்றின் ஆசிரியை மாணவனின் கன்னத்தில் அறைந்ததில் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

6 வயதான மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

வீட்டுப்பாடம் எழுதாமல் வந்ததாக கூறி ஆசிரியை கன்னத்தில் அறைந்துள்ள நிலையில் அவர் மயங்கி விழுந்துள்ளார். 

இதையடுத்து சிறுவனை மீட்ட பாடசாலை நிர்வாகத்தினர் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதித்தனர். 

அங்கு சிறுவனை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் ஆசிரியையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

manel