கந்தப்பளை கோட்லோஜ் பிரதான வீதியின் இரண்டு பாலங்கள் புனரமைப்பு

நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜா அவர்களின் தலைமையில்.கந்தப்பளை கோட்லோஜ் பிரதான வீதியின் இரண்டு பாலங்கள் புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
கடந்த திட்வா அனர்த்தத்தினால் சேதமடைந்த பாலங்களை புனரமைப்பதற்கான உள்ளூராட்சி மன்றங்கள் மாகாண சபை அமைச்சின் மூலம் நுவரெலியா பிரதேச சபைக்கு ரூபா 42 மில்லியன் பெறுமதியில் நிதி ஒதுக்கப்பட்டு இந்த இரண்டு பாலங்களும் புனரமைக்கப்படவுள்ளன.
நிகழ்வில் கல்வி உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.அத்தோடு அந்தப் பகுதியில் அமைக்கப்பட் கொங்ரீட் வீதி ஒன்றும் பிரதி அமைச்சரால் திறந்துவைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜா, பிரதி தவிசாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.நுவரெலியா நிருபர்

