கட்டுநாயக்க விமான நிலைய நுழைவுகள் பாதிப்பு

கட்டுநாயக்க விமான நிலைய நுழைவுகள் பாதிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் நுழைவுப் பாதைகள் சிலவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குறித்த பாதையின் ஊடாக பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. 

பயணிகள் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையைப் (E03 Expressway) பயன்படுத்துமாறு தெரிவித்துள்ளது. 

இந்த வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலை நிலவும் காலப்பகுதியில் விமான நிலைய வளாகத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்குடன், பயணிகள் தமதுடன் யாரையும் முனையப் பகுதிக்கு அழைத்து வருவதைத் தவிர்க்குமாறு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

எஸ். ரஜீவன்