கடந்த 24 மணி நேரத்தில் 751 சந்தேகநபர்கள் கைது

கடந்த 24 மணி நேரத்தில் 751 சந்தேகநபர்கள் கைது

கடந்த 24 மணி நேரத்தில் முழு நாடுமே ஒன்றாக நடவடிக்கையின் மூலம் 751 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களில் நான்கு பேருக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாகப் பொலிஸார் அறிவித்துள்ளனர். 

மேலும் மூவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நேற்று (20) மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட முழுமையான சுற்றிவளைப்புக்களின் எண்ணிக்கை 753 ஆகும். 

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தல், போதைப்பொருளுக்கான கேள்வியைக் குறைத்தல், நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், போதைக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தல் மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகத்தைத் தடுத்தல் ஆகிய நோக்கங்களுடன் ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

manel