கச்சா எண்ணெய்விலை 4% இற்கு மேல் திடீர் உயர்வு!

கச்சா எண்ணெய்விலை 4% இற்கு மேல் திடீர் உயர்வு!

அமெரிக்கா – ஈரான் புதிய இராணுவத் தாக்குதல்களால் உலகச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் $79 ஐத் தாண்டியது.

ஹோர்முஸ் நீரிணை வழியிலான எண்ணெய் போக்குவரத்து கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதை அடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று (13) 4% இற்கும் அதிகமாக அதிரடியாக உயர்ந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் புதிய இராணுவத் தாக்குதல்களை (Renewed Military Strikes) அறிவித்துள்ளதைத் தொடர்ந்தே இந்த திடீர் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

வல்லரசு நாடுகளுக்கிடையிலான புதிய மோதல் போக்கு காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன.

Brent Crude விலை ஒரு பேரலுக்கு $3.10 (4.08%) அதிகரித்து, $79.11 ஆகியுள்ளது.

WTI Crude விலை ஒரு பேரலுக்கு $2.95 (4.11%) அதிகரித்து, $74.36 ஆக உயர்ந்துள்ளது.

manel