இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி

இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதற்கமைய, மத்திய வங்கி இன்று (12) வெளியிட்டுள்ள தினசரி நாணய மாற்று வீத அறிவிப்பின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 331.42 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 341.36 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் (11) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று வீதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 327.67 ரூபாயாகப் பதிவாகியிருந்தது.

அதேபோல், டொலர் ஒன்றின் விற்பனை விலை 337.82 ரூபாயாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

manel