இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

டிக்கோயா நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் இடம் பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொகவந்தலாவ பெற்றோசா பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கைது சம்பவம் இன்று சனிக்கிழமை 04.30மணியளவில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர் வயோதிப தம்பதினர் இருவரையும் 21ம் திகதி கொலை செய்துவிட்டு தலைமறைவாகியிருந்த நிலையில் உறவினர்களின் வீட்டில் மறைந்திருந்த நிலையில் குறித்த சந்தேக நபர் தொடர்பில் பொதுமக்களினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொகவந்தலாவ பொலிஸார் குறித்ந சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இதேவேளை கொலையினை மேற்கொண்ட சந்தேக நபர் பதுளை பகுதியை சேர்ந்தவர் எனவும் கொழும்பு பகுதியில் வீடு ஒன்றில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த கெம்பியன் பகுதியை சேர்ந்த பெண்ணோடு தொடர்பு வைத்திருந்து அப்பெண்ணின் சகோதரர் வீட்டில் தங்கியிருந்த நிலையில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்

சம்பவம் தொடர்பில் இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

manel